பழனி முருகன் கோவில்
- பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்
- சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன.
- மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
திகம்பர் ஜெயின் கோவில்:
- திகம்பர் ஜெயின் கோவில் ஆற்காடு இடையில் - ஆற்காடு இருந்து 7 கிமீ தொலைவில் கண்ணமங்கலம் செல்லும் பாதையில் உள்ளது .
2. ஆற்காடு இருந்து திகம்பர் ஜெயின் கோவில் / பஞ்சா பாண்டவ மலை அடைய
- வழியில் நீங்கள் பலகைகள் "- pancha pandava malai - Rock cut sculptures and caves". பார்க்க முடியும். இது ஒன்பதாவது முதல் பதினோராம் நூற்றாண்டின் போது அமைக்கப்படகோவில் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
- அந்த நேரத்தில் கட்டப்பட்ட சிற்பத்தில் மகேந்திரவர்மனின் பாணி தெரிகிறது ஆனால் கட்டுரைகளில் தெளிவான சான்றுகள் இல்லை . இந்த குடைந்த பாறை வெட்டு சிற்பம் பின்புரம் ௬ மற்றும் முன்பு 6 மொத்தம் 12 தூண்கள் கொண்டுள்ளது .
அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்:
- திருவாட்போக்கி - ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறதுஇக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.
கழுகுமலை:
- கழுகுமலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
- கோயில்கள்:
- இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவை
- இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறார்.
3.கழுகாசலமூர்த்தி திருக்கோயில்
- இக்கோயிலில் முருகன் மற்றும் சிவன் கோயில்கள் உள்ளது. கோயிலுக்கு அருகில் தெப்பகுளம் உள்ளது
புனித தோமையார் மலை:
- புனித தோமையார் மலை (St. Thomas Mount) என்பது பரங்கிமலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு சிறு மலை ஆகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது.
புனித தோமையார் மலையில் அமைந்த கோவில்:
- தோமையார் மலைமீது அமைந்த கோவில் குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியாவுக்கு (Our Lady of Expectation) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இடத்தின்மீது இக்கோவிலைப் போர்த்துகீசியர் கட்டியெழுப்பினர் (ஆண்டு: 1523). கோவிலின் முதன்மைப் பீடத்தின் கீழ் அவ்விடம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 15545 மலையடிவாரத்தின் வடக்குப் பக்கத்தில் உயர்ந்தெழுகின்ற கோபுர வாசல்கள் நான்கு உள்ளன. அவற்றின் அருகே ஒரு பெரிய சிலுவை உள்ளது. அதில் 1547 என்னும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியைச் சென்றடைய 160 படிகள் கொண்ட படிக்கட்டு செதுக்கப்பட்டுள்ளது.
- மலையில் ஏறிச் செல்லும்போது படிகளின் அருகே நெடுகிலும் இயேசுவின் துன்பங்களையும் சாவையும் சித்தரிக்கின்ற சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பயணியர் மேலே ஏறிச் செல்லும்போது சிலுவைப் பாதை வேண்டல் நிகழ்த்துவது வழக்கம்.
குன்னத்தூர் மலை:
- மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும் அமைந்துள்ளது.
- குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
- இம்மலையில் சூரியன் உதயமாகும் கிழக்குத் திசை நோக்கி இக்குடைவரை கோயில் அமைந்துள்ளதால் இக்கோயில் உதயகிரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கம் ஒற்றைத் தனிக் கல்லாக பொருத்தப்படாமல் அப்பாறையிலேயே நடுவில் பீடத்துடன் இணைந்து செதுக்கப்பட்டுள்ளது.
- கி.பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால இக்குடைவரை கோயிலில் சிறிய முக மண்டபமும், வாயிலில் புடைப்புச் சிற்பங்களாக இரண்டு துவாரபாலகர்கள் மிக எளிமையாய் நின்று கொண்டிருக்கிறார்கள். குடைவரையின் இடதுபுறம் பிள்ளையாரின் புடைப்புச் சிற்பத்தை செதுக்கியுள்ளார்கள். கோயிலின் வெளியே காளை சிலை சிவலிங்கத்தை நோக்கி வணங்கியபடி காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment